×

ஏஎஸ்எஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருச்செங்கோடு, மே 10: திருச்செங்கோடு அடுத்த குச்சிபாளையத்தில் அமைந்துள்ள ஏஎஸ்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2023-24ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது. மாணவி மஞ்சுளாஸ்ரீ 591 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவன் வர்ஷன் 586 மதிப்பெண் பெற்று 2ம் இடமும் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சியை கொடுத்துள்ளனர். பள்ளி தாளாளர் கைலாசம், இயக்குனர் ஜோதி ஆகியோர், சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் செல்வகுமார் மற்றும் ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இயக்குனர் ஜோதி கூறுகையில், ‘6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிளஸ் 1 வகுப்பில் சேருபவர்களுக்கு 10ம்வகுப்பில் 480க்கு மேல் பெற்றவர்களுக்கு முழு கட்டண சலுகையும், 470க்கு மேல் பெற்றவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும், 450க்கு மேல் பெற்றவர்களுக்கு 25 சதவீதம் கட்டண சலுகையும் வழங்கப்படும்,’ என்றார்.

The post ஏஎஸ்எஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : ASS Matric School ,Tiruchengode ,ASS Matric Higher Secondary School ,Kuchipalayam ,Manjulasree ,Dinakaran ,
× RELATED ₹22.38 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்